இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறும் இங்கிலாந்து… வெற்றியை நோக்கி இந்தியா!
482 ரன்கள் இலக்கை துரத்தும் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸீல் தடுமாறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 134 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி அதன் பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. நேற்று ஒரு விக்கெட் இழப்போடு முடிந்த ஆட்டம் இன்று தொடங்கியது. ஆனால் ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் கோலியும் அஸ்வினும் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் கோலி அரைசதம் அடித்து அவ்ட் ஆனாலும், மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அஸ்வின், சதமடித்து அசத்தினார்.
இதனால் இந்திய அணி 277 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஏற்கனவே பெற்ற முன்னிலையோடு இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு 481 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய இங்கிலாந்து அணி தற்போது வரை 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணி 3 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் அந்த அணியின் வெற்றிக்கு 430 ரன்கள் தேவை.