மூன்றாம் நாளி இந்தியா தடுமாற்றம்… அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்கள்!
மூன்றாம் நாளில் இந்திய அணி தடுமாற்றத்தோடு விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 134 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஒரு இன்னிங்ஸில் 29 ஆவது முறையாக அவர் 5 விக்கெட்களை வீழ்த்துகிறார்.
முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி அதன் பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. நேற்று ஒரு விக்கெட் இழப்போடு முடிந்த ஆட்டம் இன்று தொடங்கியது. ஆனால் ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது கேப்டன் கோலியும் துணைக் கேப்டன் ரஹானேவும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 84 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தற்போது வரை 277 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.