1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (17:16 IST)

5வது டெஸ்ட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

india vs england
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்கள் எடுத்தன.
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற 378 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 76.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி விட்டது. ஜோ ரூட் 142 ரன்களும் ஜானி பெயர்ஸ்டோ 114 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக பெயர்ஸ்டோ மற்றும் தொடர் நாயகனாக ஜோ ரூட் மற்றும் பும்ரா தேர்வு பெற்றனர்