செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (18:24 IST)

தோனியால் பறிபோன வாய்ப்பு; ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்

நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

 
இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கோப்பை முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 
வங்காளதேச அணி பந்துவீச்சில் இந்திய அணி 10வது ஓவர் முதல் 13வது ஓவர் வரை திணறியது. ரோகித் சர்மா, மனிஷ் பாண்டே ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. 18வது ஓவருக்கு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியின் உச்சத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 
கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி 35 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி ஹீரோவாக மாறினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 2 ஃபோர் விளாசி 29 ரன்கள் குவித்து அசத்தினார்.
 
 
தற்போது தினேஷ் கார்த்திக் இந்திய அணி மட்டுமல்லாது இந்தியாவே கொண்டாடி வருகிறது. அவரை பாராட்டி மீம்ஸ் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருகிறது. மறுபக்கம் தமிழன்டா என்று தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மீம்ஸ் போட்டு கலக்கி வருகின்றனர்.
 
தோனி அணியில் தொடர்ந்து விளையாடி வந்த காரணத்தினால் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடிப்பது சிறமமாக இருந்தது. இந்த முத்தரப்பு டி20 தொடரில் கோலி மற்றும் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
 
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். கடைசி பந்தில் சிக்ஸ், மேட்ச் வின்னர், கடைசி நேரத்தில் அதிரடி என்று எல்ல பக்கத்தில் கலக்கிவிட்டார்.