புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:48 IST)

அஸ்வின் பரிசோதனை முயற்சிகளை செய்ய தோனி விடவில்லை… ஷேவாக் குற்றச்சாட்டு!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தோனி அஸ்வினை பரிசோதனை முயற்சிகள் செய்ய ஒருபோதும் அனுமதித்ததில்லை எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில  ஆண்டுகாலமாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் இப்போது அவர் டி 20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஷேவாக் ‘ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் தற்போது பல வேரியேஷன்களில் பந்து வீசுகிறார். பேட்ஸ்மேன்கள் தனது பந்தை அடித்துவிடக் கூடாது என்பதற்காக இதை செய்கிறார். ஆனால் முன்னர் தோனி விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் இருந்த போது அதை செய்ய விடவில்லை.’ எனக் கூறியுள்ளார்.