தொடக்க வீரர்களை இழந்த டெல்லி – நிதான ஆட்டம்!
டெல்லி அணி தனது இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்து நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்று இரு போட்டிகள் நடக்க உள்ளன. முதல் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் பிருத்வி ஷா மற்றும் தவான் ஆகிய இரு தொடக்க ஆட்டக்காரர்களும் 8 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதையடுத்து கேப்டன் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். தற்போது அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 46 ரன்கள் சேர்த்துள்ளது.