மும்பை-டெல்லி புரோ கபடி போட்டி டிரா!
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி டிராவிலும், இன்னொரு போட்டியில் உத்திரபிரதேசம் அணியும் வென்றது
முதலில் நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை காட்டியதால் இரு அணிகளும் தலா 37 புள்ளிகள் எடுத்து போட்டியை டிரா செய்தன
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் உத்தரபிரதேச அணி 45 புள்ளிகளும் பெங்களூரு அணி 33 புள்ளிகளும் எடுத்ததால் உத்தரபிரதேசம் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், உத்தரபிரதேசம், மும்பை மற்றும் அரியானா ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது