புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:23 IST)

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இந்தியாவில் மரணம்… அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் இந்தியாவுக்கு வந்திருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக பணியாற்றி வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் அவர் வர்ணனைப் பணிக்காக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென மாரடைப்பு வந்து இன்று உயிரிழந்துள்ளார்.

52 டெஸ்டுகள், 164 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிப் பிரபலம் அடைந்தவர் டீன் ஜோன்ஸ். டெஸ்டில் 11 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் அடித்துள்ளார். அவரின் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.