இந்திய டெஸ்ட் தொடர்… விலகிய முக்கிய தென்னாப்பிரிக்க வீரர்!
இந்தியாவுக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் குயிண்ட்டன் டி காக் விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணியின் துருப்புச் சீட்டுகளில் ஒருவரான குயிண்ட்டன் டி காக் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட உள்ளார்.
அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் அவரின் மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால சொந்த விடுப்பை எடுத்துள்ளார். இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.