திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (11:11 IST)

இந்திய அணியின் ஆலோசகராக தோனி… கிளம்பியது புது சர்ச்சை!

ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆடுகளத்துக்கு வெளியே இருந்தபடி அணியை அவர் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும் அணியின் ஆலோசகராக இருப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதாக டி-20 அணியை அறிவித்தபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

ஆனால் அவரின் இந்த நியமனம் இப்போது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தோனி பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் இப்போது இரண்டாவது பதவியைப் பெறுவது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்று சஞ்சீவ் குப்தா என்பவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.