வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (14:34 IST)

பெண்களை பற்றி சர்ச்சை கருத்து : பிரபல வீரர்களுக்கு அபராதம்

பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்த்திக் பாண்டியா, கே.எல். ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சமீபத்தில் பிரபல ஹிந்தி பட இயக்குநர் ஒருவது டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஹர்த்திக் பண்டியா, கே.எல்,.ராகுல் ஆகிய இருவரும் பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக புகார் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் இருவருக்கும் பலத்த எதிர்ப்புகள் வெளியானது. இந்நிலையில் தற்போது பெண்களை பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டதற்க்காக இருவருக்கும் தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
 
மேலும் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக ரூ. 10  லட்சம் அளிக்க வேண்டும் எனவும்: உயிரிழந்த 10 துணைராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தற்போது உத்தரவிட்டுள்ளது.