வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (21:15 IST)

ஒர ஓவரில் 32 ரன் அடித்த கிரிஸ் கெயில் ....வைரலாகும் வீடியோ

கனடா நாட்டில் குளோபல் டி 20 தொடர் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வான்கவுவர் நைட்ஸ் மற்றும் எட்மொண்டன் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேண் கிரிஸ் கெயில் வான்கவுவர் அணிக்காக விளையாடினார்.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த எட்மொண்டன் அணி 165 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வான்கவுவர் அணியினர் களம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டக்காரர் கெயில்  தொடக்கத்தில் நிதானமாக விளையாடி,, பின்னர் பந்துவீச்சை சிதறடித்தார். பாக்கிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய 13 வது ஓவரில் மொத்தம் 34 ரன்கள் எடுத்தார்.
 
பாக்கிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய 13 வது ஓவரில் 6-6-4-4-6-6 ஆகிய சிக்ஸர் , போர்ஸும் அடித்து ரன் ரேட்டை அதிகமாக்கினார். அவர் 44 பந்துகளை சந்தித்து மொத்தம் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறவைத்தனர். தற்போது இந்தப் போட்டியில் பாக்கிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய  13 வது ஓவர் கெயில் விளாசித்தள்ளிய வீடியொ வைரலாகிவருகிறது.