திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2020 (11:14 IST)

பிராமணர்களுக்கு மட்டுமே நடக்கும் கிரிக்கெட் டோர்னமெண்ட் – சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்!

ஹைதராபாத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போன்ற விளையாட்டு. இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது ஒரு கனவு. ஆனால் கிரிக்கெட்டில் ஆரம்ப காலம் தொட்டே பிராமண சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியில் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ளூர் கிரிக்கெட் க்ளப் பிராமண் இளைஞர்களுக்காகவே ஒரு கிரிக்கெட் தொடரை கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தியுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் பரவிய நிலையில் பலரும் அதை விமர்சித்துள்ளனர்.