டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுக்கள்: பிராவோ சாதனை
டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கு இந்திய பந்துவீச்சாளர் பிராவோ சாதனை செய்துள்ளார்.
தற்போது லண்டனில் 100 பந்துகளில் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோ அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார்
இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 600 ஆவது விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்
வேறு எந்த ஒரு பந்து வீச்சாளரும் டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்தியது இல்லை என்ற நிலையில் பிராவோ இந்த சாதனையை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிராவோவுக்கு அடுத்தபடியாக 466 விக்கெட்டுகள் உடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது