புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (11:30 IST)

உலககோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி தடை கோர பிசிசிஐ திட்டம்

புல்வாமா தாக்குதலை அடுத்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாட கூடாது என்ற குரல் ஓங்கி வலுத்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக உலகக்கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிசிசிஐ, ஐசிசிக்கு கடிதம் எழுதவுள்ளது.
 
காஷ்மீர் புல்வாமாவில் ஜெய்ச் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த அமைப்பின் தலைவர் மசூர் அசார் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தீவிரவாதத்திற்கு உடந்தையாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதால் அந்நாட்டு கிரிக்கெட் அணியை உலகக்கோப்பையில் புறக்கணிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
ஆனால் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரே ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். அதிலும் பாகிஸ்தானுக்காக உலகக்கோப்பையை பெற்று கொடுத்தவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் அவர் பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்க கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கருதப்படுகிறது.
 
பொதுவாக விளையாட்டில் அரசியலை நுழைக்கக்கூடாது என்றாலும் இந்த தாக்குதல் அரசியல் இல்லை என்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டது என்பதால் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்நாட்டு அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது