திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (18:32 IST)

விளையாட்டுத் துறையில் பெண்களை பற்றிய பார்வை என்ன??.. பிபிசி சிறப்பு கருத்து கணிப்பு

”விளையாட்டுகளில் பெண்கள்” என்ற அடிப்படையில் பிபிசி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

29% பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் 42 % ஆண்கள், தாங்கள் விளையாடுவதாக கூறுகிறார்கள். 15-24 வயதுடையவர்களே பெரும்பாலும் விளையாடுகிறார்கள்,. மேலும்30% திருமணம்/விவாகரத்து ஆனவர்களை ஒப்பிடும்போது திருமணம் ஆகாதவர்களில் 54% பேர் விளையாடுகின்றனர்.

தற்போது, புதிய ஆய்வுகள் என்ன கூறுகிறதென்றால், 41% மக்கள் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என நம்புகின்றனர். எனினும் சில இந்தியர்கள் ஆண்களை விட பெண்கள் சரியான விளையாட்டு வீராங்கனைகள் இல்லை என நம்புகின்றனர். 37% பேர் பெண் வீராங்கனைகளுக்கு போதுமான பெண் தன்மை இல்லை என கூறுகின்றனர். மேலும் 38% பேர், ஆண்களை விட பெண்கள் விறுவிறுப்பாக விளையாடுவதில்லை என கூறுகின்றனர்.

எனினும், ஆண் பெண் இருவரும் ஒரே சம்பளம் வாங்குவதாக 85% இந்தியர்கள் நம்புகின்றனர். சில விளையாட்டுகள் பெண்களுக்கு பொருத்தமான விளையாட்டு இல்லை என கருதுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்,

“அது பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல, 29 சதவீதத்தினர், பெண்கள் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் அல்ல என நம்புகின்றனர். பெண்கள் ஒரு மாதம் முழுவதும் விளையாட்டில் ஈடுபட முடியாது”

இது போன்ற காரணங்களை அடுக்குகின்றனர்.

எந்தெந்த விளையாட்டுகள் பெண்களுக்கு பொருந்தாது என கருதுகின்றனர்?
பெண்கள் ஆண்கள் இருவரும் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம் என கருதுகின்றனர். எனினும், குத்துச்சண்டை, பளு தூக்குதல், கபடி, மோட்டார் வாகன போட்டிகள் ஆகியவை பெண்களுக்கு பொருந்தாது என கருதுகின்றனர்.


அதே போல், கிரிக்கெட் துறையில் பாலின வேற்றுமை நிறைய உள்ளது. 25% ஆண்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, 15% இந்திய பெண்கள் விளையாடுகின்றனர். எனினும் கபடியில் இந்த வேற்றுமை குறைவாக உள்ளது. கபடியில் 15% ஆண்கள் மற்றும் 11% பெண்கள் விளையாடுகின்றனர்.

பிபிசி ஆய்வுகளின் படி, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விளையாட்டுகளில் அதிகமாக பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் 54% சதவீதமாகவும், மஹாராஷ்டிராவில் 53% சதவீதமாகவும் இது உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 15% ஆக உள்ளது.

பெண்களின் விளையாட்டு என்று வரும்போது, 18% பேர் விருப்பப்பட்டு பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 42% பேர் முதன் முதலில் பெண்கள் விளையாடுவதை பார்த்துள்ளனர். 50% இந்தியர்கள் அதிகளவில் பெண்களின் விளையாட்டு கவர் செய்யப்படுவதாக நினைக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டின் பெண்கள் டி20 தான் இந்தியாவில் அதிகளவில் பார்க்கப்பட்ட பெண்கள் விளையாட்டாகும். அதே போல், 64 % பேர் விளையாட்டுகளிலும் உடல் சார்ந்த பயிற்சிகளிலும் தற்போது பங்கேற்பதில்லை. 69% பேர் பள்ளியில் நேரம் கிடைக்கும்போதோ அல்லது அண்டை வீட்டுக்காரர்களோடோ சிலவற்றை விளையாடுகிறார்கள். சிறுவயதிலிருந்து வயது வரும்வரை விளையாட்டுகளில் பங்கேற்பது குறைந்து வருகிறது.

74% மக்கள் சர்வதேச ஆண் விளையாட்டு வீரர்களில் ஒருவரின் பெயரைக் கூட சொல்ல முடியவில்லை, அதே போல் 80% சதவீதத்தினர் சர்வதேச பெண் விளையாட்டு வீராங்கனை ஒருவரின் பெயரைக் கூட சொல்ல முடியவில்லை.