1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (13:02 IST)

அதிரடி பேட்ஸ்மேன் ’கிரிஸ் கெய்ல்’ ... கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்க முடிவு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிரிஸ்கெய்ல் வரும் உலகம் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் ஒருநாள். டெஸ்ட் , ஐபிஎல் , ஐசிஎல் , என எந்த போட்டி என்றாலும் தில்லாக களத்தில் இறங்கி சிக்ஸர் வாணவேடிக்கை நடத்திக் காட்டியவர் கெய்ல். அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். 
 
இந்நிலையில் 39 வயதான கிரிஸ்கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான கெய்ல் கடந்த வருடம் ஜூலை  மாதம் தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். பின்னர் அடுத்து வரும் உலக கோப்பையில் தான் விளையாட உள்ளார். இப்போட்டிகள் மே மாதம் 30 ஆம்தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது. கெய்ல் பங்குபெறும் 5 ஆவது உலக கோப்பை இதுவாகும் .
கெய்ல் மொத்தம் 284 ஒருநாள் போட்டியில் விளையாடி 9727 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.12 வைத்துள்ளார்.49 அரை சதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ரன்கள் 215 ரன்கள் ஆகும். மேலும் இன்னும் 677 ரனகள் எடுத்தால் உலகில் தலைசிறந்த பேட்ஸ் மேனும்,  வெஸ்ட் இண்டீஸ் வீரருமான லராவின் சாதனையை கெய்ல் முறியடிக்கலாம் என்று  சொல்லப்படுகிறது.
கெய்ல் கிரிக்கெட்டில் இருந்து ஒயுவு பெறப்போகும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.