வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (10:44 IST)

மீண்டும் களம் இறங்கும் சச்சின், ரிக்கி பாண்டிங்! – காட்டுத்தீ நிதி கிரிக்கெட்

ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மிகப்பெரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான விலங்குகள், தாவரங்கள் அழிந்துள்ளன. மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மிகப்பெரும் அழிவு சம்பவமாக ஆஸ்திரேலிய காட்டுத்தீ அமைந்துள்ளது.

இந்நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி நிதி திரட்ட பல்வேறு அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன. காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக பிப்ரவரி 8ம் தேதி புஷ்பயர் பேஷ் என்ற கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

90ஸ் கிட்ஸின் ஆதர்ச நாயகர்களான சச்சின் டெண்டுல்கர், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையில் இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக செயல்படுகின்றனர்.