புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (09:55 IST)

பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டிய ஆஸ்திரேலியா! – வார்னர், லபுஸ்சன் மரண மாஸ்!

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாம் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பெருவாரியான ரன்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் – இரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. பிங்க் நிற பந்தை அடித்து நொறுக்க தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டே ஆட்டக்காரர்களை வைத்து அட்டகாசமாக ஆடி வருகிறது.

இதுவரை 90 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 402 ரன்களை பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. டேவிட் வார்னர் பாகிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 217 ரன்கள் எடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். வார்னர் 250க்கும் மேல் எடுத்தால் ஆஸ்திரேலியா புதிய சாதனையை படைக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். மார்னஸ் லபுஸ்சன் 162 ரன்கள் அடித்து ரன் ரேட்டை எகிற செய்து, பிறகு விக்கெட்டை இழந்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கி ஆடி வருகிறார்.

இரண்டு ஆட்டக்காரர்களை மட்டுமே வைத்து 400 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்து பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டியுள்ளது ஆஸ்திரேலியா.