ஒரே போட்டியில் உச்சத்துக்கு சென்ற ஆஸ்திரேலியா… தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கல்!
ஆஸ்திரேலியா நேற்று பங்களாதேஷை 73 ரன்களில் சுருட்டியதால் புள்ளிப் பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
டி 20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன. அதையடுத்து நேற்று நடந்த வரும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சொதப்ப ஆரம்பித்தனர். பேட்ஸ்மேன்கள் வருவதும் விக்கெட்டை தாரை வார்ப்பதுமாக பெவிலியனுக்கு திரும்பினர். ஆஸி அணியின் ஆடம் ஸாம்பா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 73 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி இலக்கை எளிதாக எட்டியது. இதனால் ஆஸி அணியின் நெட் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்து இப்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் இரண்டாம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா ஒரே போட்டியில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு அரையிறுதி வாய்ப்பு சிக்கல் ஆகியுள்ளது.