1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified சனி, 19 நவம்பர் 2022 (16:53 IST)

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

aus vs eng
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 281 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கும் நிலையில் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று 2-0 என்ற கணக்கில் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran