திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (07:09 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி.. ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி..!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 59 ரன்கள் ஷார்ட் 41 ரன்கள் எடுத்தனர், இந்த நிலையில் 180 என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய நிலையில் அந்த அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்ததால் 19. 2ஓவரில் 151 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும்  இழந்ததை அடுத்து ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து 1-2  என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

Edited by Siva