வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (07:28 IST)

10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி!

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளைத் தோற்று தொடரை இழந்த இலங்கை அணி, மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 62 ரன்கள் முன்னிலையோடு இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து 219 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. இலங்கை அணியின் பதும் நிசாங்கா அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.