வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 ஜனவரி 2022 (17:01 IST)

போராடி டிரா செய்தது இங்கிலாந்து: தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 
 
கடந்த சில வாரங்களாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் 388 என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்திருந்தால் தோல்வி அடைந்திருக்கும் என்ற நிலையில் போராடி போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்த தொடரில் 4 போட்டிகள் இதுவரை முடிவடைந்திருக்கும் நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 14ம் தேதி தொடங்க உள்ளது