ஐபிஎல் தொடர்… மும்பை அணியில் இருந்து விலகிய அர்ஜுன் டெண்டுல்கர்!
மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் ஏலத்தின் கடைசி நபராக அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த அணிக்காக சச்சின் விளையாடியதும், இப்போது அவரே அந்த அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இருப்பதும் அவரை எடுக்க காரணம் என்றும் சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் இதுவரை எந்த போட்டிக்கும் அவர் விளையாட தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் பயிற்சியின் போது அவர் காயமடைந்ததால் மும்பை அணியை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டில்லி வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.