திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (07:54 IST)

மெஸ்சிக்கு உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது!

அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு உலகின் தலை சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது 
 
அர்ஜென்டினா நாட்டின் மெஸ்ஸி கடந்த பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடி வருகிறார் என்பதும் அவர் களத்தில் இறங்கி விட்டால் கோல்கள் சரமாரியாக விழும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் லயோனல் மெஸ்ஸி அவர்களுக்கு பாலன் டிஆர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவர் 7வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸிக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்