1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2023 (09:31 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட அமெரிக்க அணி தகுதி: ஐசிசி அறிவிப்பு

usa cricket
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட அமெரிக்க அணி தகுதி பெற்று இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் தகுதி சுற்றில் அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளதை அடுத்து அந்த அணி உலக கோப்பையில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உலக கோப்பை தகுதிப்போட்டிக்கான இறுதிச்சுற்று தகுதி போட்டியில் ஜெர்சி அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வீழ்த்தியதை அடுத்து அந்த அணி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்க அணி இதற்கு முன்பு உலக கோப்பை தொடரில் கடந்த 2004 ஆம் ஆண்டு தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் தகுதி பெற்றுள்ளது. மேலும் ஸ்காட்லாந்து ஓமன் நேபாளம் நெதர்லாந்து ஜிம்பாவே இலங்கை மேற்கு இந்திய தீவு ஆகிய நாடுகளும் உலகக்கோப்பை போட்டிக்கான கடைசி இரண்டு இடங்களுக்காக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva