திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (08:20 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி.. ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து..!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது 
 
இந்த போட்டி சற்றுமுன் முடிவடைந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடிய நிலையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பியதால் வெறும் 75 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
நியூசிலாந்து அணியின் பிலிப்ஸ் மற்றும் ஹென்றி ஆகிய இருவரை தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சை பொறுத்தவரை ஆப்கானிஸ்தானின் ஃபாரூக் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கட்டுகளையும், ரஷித்கான் நான்கு விக்கெட்டுக்களையும்,  நபி இரண்டு விக்கட்டுகளையும், வீழ்த்தியுள்ளனர். 
 
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் குரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran