ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (21:30 IST)

பஞ்சாப் ஹாக்கி வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு.! முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு..!

Punjap CM
ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார்.
 
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய ஹாக்கி அணிக்கு பஞ்சாப்பை சேர்ந்த ஹர்மன்ப்ரீத்சிங் கேப்டனாக அபராமாக ஆடி வெற்றியை தேடி தந்தார். ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 ஆவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

இதற்கு முன் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. 1972-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

 
இந்நிலையில் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த்சிங் மான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு விளையாட்டு விதிகளின் படி தலா ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.