நியூசிலாந்துக்கு இந்தியா கொடுத்த இமாலய இலக்கு!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கு கொடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஆகிய இருவரும் சதம் அடித்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அடுத்த அரை சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது
இதனை அடுத்து 386 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 349 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று 385 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva