269 ரன்களுக்கு ஆட்டம் இழந்த ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 269 ரன்கள் ஆட்டம் இழந்தது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கட்டையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப்யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் 270 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி மற்றும் தொடரை வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva