கொரொனா பரவல் அதிகரிப்பு: பிரதமர் மோடி இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை
சீனாவிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது. இது, பலகோடி மக்களைப் பாதித்த நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
கொரொனா உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நிலையில், முதல் அலை, இரண்டாம் அலை முடிந்து, கொரோனாவில், உருமாறிய வடிவமான ஒமிக்ரான், பிஏ 5 , எபோலா ஆகிய தொற்றுகள் உலக நாடுகளை அச்சுறுத்தியது.
தற்போது, இந்தியாவில் கொரொனா மற்றும் இன்புளூயன்சா ஹென்3என்2 தொற்று தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதரத்துறை எச்சரித்தது.
இந்த நிலையில், ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்றுவரை கொரோனா பாதிப்பு 699 என்று இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1134 என அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து தற்போது 1.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலும் அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பற்றி இன்று மாலை 4:30 மணீக்கு பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.