வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (22:44 IST)

ஒலிம்பிக் போட்டியில் 15 வயது சிறுமி தங்கப்பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற டைவிங்கில் 14 வயது சிறுமி உலகச் சாம்பியனை தோற்கடித்து தங்கப் பதக்கம் தட்டிச் சென்றார்.

கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.

இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஒலிம்பிக் டைவிங் போட்டியில் சீனாவைச் சேர்ந்த குவான் ஹாங்சன் என்ற 15 வயது சிறுமி தனது சகப் போட்டியாளரும் 15 வயதான உலகச் சாம்பியனுமான சென் யூக்சியை தோற்கடித்து தங்கப் பதக்கம் தட்டிச் சென்றார்.