1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 மே 2022 (21:59 IST)

குஜராத் அபார பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான்: 131 ரன்கள் மட்டுமே இலக்கு!

RR vs GT final
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களத்தில் இறங்கியது 
 
ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணிக்கு அடி மேல் அடி விழுந்தது.  தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் நட்சத்திர ஆட்டக்காரர்கள் வரை ராஜஸ்தான் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில் குஜராத் அபார பந்துவீசியது.
 
இந்த நிலையில் ஆட்ட நேர இறுதியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது
 
இதனை அடுத்து 131 எந்த இடத்தை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது இந்த போட்டியில் குஜராத் அணியை போட்டியை வெல்ல மிக அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது