செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இன்று ஐபிஎல் இறுதி போட்டி: சாம்பியன் பட்டம் வெல்ல போவது குஜராத்தா? ராஜஸ்தானா?

ipl final1
இன்று ஐபிஎல் இறுதி போட்டி: சாம்பியன் பட்டம் வெல்ல போவது குஜராத்தா? ராஜஸ்தானா?
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்றுடன் முடிவுக்கு வருகிறது 
 
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன 
 
குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே ஆரம்பத்திலிருந்தே அபாரமாக விளையாடி வந்தன
 
ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் என இரண்டு இளம் வீரர்களை அணிகளை வழிநடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னர் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதும் அதில் பல இசை நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது