விசாகன் படம் குறித்து வாய் திறந்த நவீன்!
‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தந்து விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது.
சமீபத்தில் இவரது இயக்கத்திலும் நடிப்பில் வெளிவந்த அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என ரஜினி மருமகன் விசாகனின் மாமா சொர்ணா சேதுராமன் தடைகூறினார். இவர் ப்ளாஷ் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர் இயக்குனர் நவீனை அணுகி, விசாகனை வைத்து ஒரு படம் இயக்க கேட்டுக்கொண்டு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பணத்தை வாங்கிக்கொண்டு படத்தை இயக்கவில்லை என நவீன் மீது சொர்ணா சேதுராமன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் வாங்கிய ரூ.50 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு தான் "அலாவுதீனின் அற்புத கேமரா" வெளியிடவேண்டும் இல்லையென்றால் பிரச்னையை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ள நவீன் கூறியிருப்பதாவது, விசாகனின் மாமா சொர்ணா சேதுராமனிடம் வாங்கிய முன் பணத்தையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் பிரித்துகொடுத்துவிட்டேன். ஆனால் அவரோ வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காமல் அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கியிருப்பதாகவும் என்றும் கூறினார்.
படம் நின்று போனதற்கு முக்கிய காரணமே தயாரிப்பு நிறுவனம் தான். அங்கிருந்து எந்தப்பிரச்சனையும் வராமல் இருந்திருந்தால் விசாகனின் படம் குறிப்பிட்ட தேதியிலேயே தொடங்கியிருக்கும். அலாவுதீன் அற்புத கேமரா படத்தின் கதைக்கும் விசாகனிடம் சொன்ன கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட கதை. இது விசாகனுக்கும் தெரியும். எனவே என் தரப்பில் நியாயம் இருக்கிறது. நிச்சயம் நீதி வெல்லும் என்று நவீன் கூறியுள்ளார்.