Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குபேர முத்திரையை எப்போது எவ்வாறு செய்யவேண்டும்...?

Written By Sasikala
Updated: சனி, 30 ஜனவரி 2021 (18:08 IST)

குபேர முத்திரையை அதிகாலையில் செய்வது சிறப்பு. சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, ஆள்காட்டி விரல் நுனி, நடு விரல் நுனி  மற்றும் கட்டை விரல் நுனி ஆகியவற்றை சேர்த்துவைக்கவும்.
 
மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளை மடக்கி உள்ளங்கை பகுதியில் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி  இருக்கவேண்டும். முதலில் செய்ய சிரமமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும்.
 
இவ்வாறு செய்யும் முத்திரைக்கு குபேர முத்திரை என்று பெயர். இந்த முத்திரையை நேர கணக்கு எதுவும் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு நேரம்  வேண்டுமானாலும் செய்யலாம்.
 
இந்த முத்திரையை செய்வதால் மனதில் உள்ள ஆசைகள் விரைவில் நிறைவேறும். பொருளாதார பற்றாக்குறைகள் விரைவில் நீங்கும்.
 
பெரு விரல் சுக்கிரனையும், ஆள் காட்டி விரல் குருவையும், நடு விரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்து பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன்  சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக சேர்க்கை பொருளாதார வசதிகளை பெருக்கும் கிரக சேர்க்கையாகும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments