1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (14:20 IST)

அமாவாசை தினத்தில் மேற்கொள்ளவேண்டிய விரத முறைகள் என்ன...?

அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி போன்றவற்றை உங்கள் ஊரில் கோவில் குளக்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் தர வேண்டும்.


இந்த சடங்குகளை முடித்த பின்பு சடங்குகளை செய்த வேதியர்களுக்கு அரிசி, காய்கறிகள், வஸ்திர துண்டு போன்றவற்றை தானம் அளிப்பது சிறந்தது ஆகும்.

அமாவாசை நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து முன்னோர்களின் தாகத்தை தீர்க்கலாம். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி கிடைக்கும்.

நம் முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.

மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிரார்த்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன.

மேலும் நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள், திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை, உடல் ஆரோக்கிய குறைபாடுகள் போன்றவை விரைவில் நீங்கும்.

திருஷ்டி கழித்தல் : தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.