செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:52 IST)

சிவனுக்கு உரிய வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

Lord Shiva
சிவனுக்கு உரிய சிவராத்திரியை நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவரா த்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத் திரி என்று ஆகமங்கள் கூறுகின்றன.


ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியா ர் பலர்  இந்த  சிவராத்திரியையும் மாதந் தோறும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.

சித்திரை மாதம்: இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது. வைகாசி மாதம்: வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

ஆனி மாதம்: வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது. ஆடி மாதம்: தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

ஆவணி மாதம்: வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது. புரட்டாசி மாதம்: வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

ஐப்பசி மாதம்: வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது. கார்த்திகை மாதம்: இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

மார்கழி மாதம்: வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது. தை மாதம்: வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

மாசி மாதம்: தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது. பங்குனி மாதம்: வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.