1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (16:16 IST)

மகாலட்சுமியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக அமர வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்...?

mahalakshmi
பூஜையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம், அந்த மகாலட்சுமி தேவியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக அமர வைத்துக் கொள்ள முடியும்.


அந்த வரிசையில் மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம்.

வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது.

மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களின் வரிசையில் செம்பருத்தி பூவிற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றும், புதன்கிழமை அன்றும் சிவப்பு நிறத்தில் ஒற்றை அடுக்கில் ஐந்து இதழ்களைக் கொண்ட செம்பருத்திப்பூவை மகாலட்சுமிக்கு சூட்டி வழிபாடு செய்து வருவதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருளில் ஏலக்காயும் அடங்கும். வாசனை திரவியங்களில் பட்டியலில் பன்னீருக்கு எப்போதுமே முதலிடம். பெரிய பெரிய பூஜைகள் ஹோமங்கள் இதில் வைக்கும் கலச சொம்பில் கட்டாயமாக இந்த பன்னீரும் சேர்ந்திருக்கும். ஏனென்றால் கடவுளை வசியப்படுத்த கூடிய தன்மை இந்த பன்னீருக்கு அதிகமாகவே உள்ளது.