வாழைநார் திரியினால் தீபம் ஏற்றுவதால் என்ன பலன்கள்...?
வாழைத்தண்டு நாரை திரியாக திரித்து அதில் தீபம் ஏற்றினால் முன்னோர்களின் சாபங்கள் விலகும். அதோடு ஏதேனும் தெய்வக் குற்றங்கள் இருந்தால் அதுவும் விலகி வீட்டில் அமைதி உண்டாகும்.
தீபத்தில் போடப்படும் திரியை பொறுத்து அதற்கான பலன்களும் மாறுபடுகிறது. வாருங்கள் வாழைநார் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
வாழை நாரில் செய்யப்பட்ட திரியை பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சினைகளும் காணாமல் போகும். மேலும் நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது.