செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (14:42 IST)

திருவள்ளுவர் சிலைக்கு லேசர் ஒளியூட்டும் விளக்குகள்! – சுற்றுலாத்துறை அமைச்சர்!

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான கன்னியாக்குமரி திருவள்ளுவர் சிலைக்கு லேசர் விளக்குகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பல்வேறு துறைகளிலும் மேம்பாடுகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கல்வித்துறை, அறநிலையத்துறை உள்ளிட்டவற்றை தொடர்ந்து சுற்றுலா துறையும் பல்வேறு மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரபல சுற்றுலா தளமாக உள்ள கன்னியாக்குமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு லேசர் விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் திருவள்ளுவர் சிலையை கண்டுகளிக்கும் வகையில் லேசர் விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.