2025 சனி பெயர்ச்சி! ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிகள் இதுதான்..! எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? | 2025 Sani Peyarchi
நவக்கிரகங்களில் நன்மை, தீமை இரண்டையுமே இரு மடங்காக வழங்கக்கூடியவாரகவும், நீதியை நிலைநாட்டுபவராகவும் விளங்குகிறார் காகத்தின் மேல் சஞ்சரிக்கும் சனி பகவான். கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது சொந்த ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பயணிக்கிறார். இதனால் இரு ராசிகளை சேர்ந்த நட்சத்திரத்தாருக்கும் பல சாதக, பாதகங்கள் ஏற்பட உள்ளது. அது குறித்து பார்ப்போம்.
கும்ப ராசி:
சனி பகவானின் அதிகாரத்திற்குரிய ராசியான கும்ப ராசியில் தற்போது சனி பகவான் சஞ்சரித்து வந்தாலும், அவர் விரைவில் இடம்பெயர்வதால் கும்பராசியில் ஏழரை சனி இறுதி கட்டத்தை அடைகிறது. இதனால் இதுவரை இருந்த வந்த பல தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் மாணவர்கள் நல்ல புத்தியும், கூர்மையான அறிவையும் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
மீனம் ராசி:
2025 மார்ச்சில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி காரணமாக சனி பகவான் கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்வதால், ஏழரை சனியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறுகிறீர்கள். இதனால் மீன ராசியின் கீழ் வரும் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சனியின் ரேகை தீர்க்கமாக இருக்கும்.
பல புதிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். தொழிலில் பொறுமையை சோதிக்கும் சூழல்கள் ஏற்படும். சிக்கல்கள் தேடி வந்தாலும் பொறுமையுடன் இருப்பதுடன், ஆன்மீக நாட்டத்துடன் இருப்பது நல்லது. சிவபெருமான் வழிபாடு பிரச்சினைகளை சமாளிப்பதற்கான மனோபலத்தை அளிக்கும்.
மேஷம் ராசி:
மார்ச் 2025ம் ஆண்டில் ஏற்படும் சனிப்பெயர்ச்சி காரணமாக மேஷ ராசி சனியின் பார்வையில் விழுகிறது. இது ஏழரை சனியின் முதற்கட்டமாக அமைகிறது. இதனால் சனியின் பாதிப்பு இந்த ராசிக்காரர்களுக்கு குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். குடும்ப உறவுகளில் சின்ன சின்ன பிரச்சினைகள் வரலாம். பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைக்க முடியும். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து ஈடுபடுவது நல்லது.
வரும் காலங்களில் ஏழரை சனியின் ரேகைகள் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு தீவிரமடையும் என்பதால் ஆன்மீக வழிபாடும், எதையும் எதிர்கொள்ளும் மனோபலத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
Edit by Prasanth.K