Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபத்தை ஏற்றும்போது கடைபிடிக்கவேண்டிய சில முறைகள் என்ன...?

Written By Sasikala
Updated: சனி, 23 மே 2020 (13:03 IST)
 
சில விசேஷ நாட்களில் நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றும்போது தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.
 
விளக்கு ஏற்றும் திசை பலன்கள்:
 
கிழக்கு திசை நோக்கு விளக்கு ஏற்றுவதினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும். 
 
மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும்.
 
வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
 
தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது.
 
விளக்கு ஏற்றும் எண்ணெய்:
 
முதலில் விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்களை பற்றி தெரிந்து கொள்வோம். சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், சுட்ட எண்ணெயினாலும் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. இவையெல்லாம் நம் வீட்டில் தற்திரியத்தை கொண்டு வைந்து சேர்க்கும்.
 
நெய்: நெய்யில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும், எதை நினைத்து அந்த தீபம் ஏற்றுகிறோமோ அந்த காரியம் நிறைவேறும்.
 
நல்லெண்ணெய்: நல்லெண்ணையில் விளக்கு ஏற்றினால் ஆரோக்கியத்தை பெற்றுத்தரும்.
 
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றினால் வசீகரத்தை உண்டு செய்யும்.
 
இலுப்பை எண்ணெய்: வீட்டில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றினால் சகலகாரியத்திலும் வெற்றியை பெற்று தரும்.
 
விளக்கெண்ணெய்: விளக்கெண்ணெய்யில் தீபம் ஏற்றுவதால் புகழ் உண்டாக்கும்.
 
வேப்ப எண்ணெய்: வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால் கணவன், மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும்.
 
இந்த ஐந்து எண்ணெய்யும் சேர்த்து ஏற்ற கூடிய பஞ்சக்கூட்டு எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் தெய்வத்தின் அருளையும், குலதெய்வத்துடைய அருளையும்  பெற்று தரும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்