புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

காமதேனுவை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்...!!

காமதேனு வழிபாடு, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் அற்புத வழிபாடு. காமதேனு வழிபட்டால் உங்களது வீடு சுபீட்சம் பெறும். மஹாலக்ஷ்மி கடாட்சம்  நிறைந்து காணப்படும். 

காமதேனு விக்ரஹம் வைத்து வழிபடுவதால் கேட்ட வரம் உடனே கிடைக்கும். எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். பூஜை அறையில் காமதேனு விக்ரஹம் இருப்பது நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். விக்ரஹம் இல்லாதவர்கள் காமதேனு படத்தை வைத்து  பூஜை செய்யலாம். 
 
காமதேனு விக்ரஹம் கன்றுடன் கூடியதாக கட்டாயம் இருக்க வேண்டும். விக்ரஹம் வைத்திருப்பவர்கள் தினமும் காமதேனுவை வழிபட்டு வந்தால், சகல  சௌபாக்கியங்களும் பெறுவீர்கள். காமதேனு விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அந்த விக்ரஹத்திற்கு தினமும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும்  பாலாபிஷேகம் செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முற்றிலுமாக நீங்கிவிடும். 
 
காமதேனு விக்ரஹத்தின் கொம்பு பகுதியில், நெற்றிப் பகுதியில், கால்களில், மடியில் என மஞ்சள், குங்குமம் இட வேண்டும். பசுவின் கன்றிற்கும் இது போல்  மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். காமதேனுவிற்கு மல்லிகைப்பூ சாற்ற வேண்டும்.

பின்னர் உங்களின் இரு கரங்களாலும் காமதேனுவை தொட்டபடி, உங்களுக்கு இருக்கும் குறைகளை, கோரிக்கைகளை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேண்டி கொண்டபின் அப்படியே கைகளை எடுக்காமல், கீழே  உள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும். 
 
காமதேனு மந்திரம்: 
 
ஓம் சுபகாயை வித்மஹே! 
காமதாத்திரியை, 
சதீமஹி தந்னோ தேனு 
ப்ரசோதயத். 
 
இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும்.