திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கண் திருஷ்டியை போக்க செய்யப்படும் சில பரிகாரங்கள்...!

கண்திருஷ்டி: கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர்.
அமாவாசை, பெளா்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவா்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம். வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீா் தெளிக்க வேண்டும்.
 
கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.
 
ஆகாச கருடன் கிழங்கு வாங்கி அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
 
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
 
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
 
பசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும்.