ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனியினால் ஏற்படும் பிரச்சனைகள் தீர எளிய பரிகாரங்கள் !!

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றக்கூடாது. இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடாகும்.


எள்ளை எண்ணெய்யாக்கி அந்த எண்ணெய்யைக் கொண்டு  தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல. எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும்.
 
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் சனி பகவா னுக்கு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
 
சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
 
ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது வாழைப்பழமாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின்  தொல்லைகளை குறைக்கும்.
 
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம். அவருடைய வாகனமான நாய்களுக்கு உணவு அளிக்கலாம். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 
வேத பாடசாலையில் வேதம் படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம் அத்துடன் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
 
கோமாதா பூஜை செய்யலாம். ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.