Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வரளி மலர் எந்த தெய்வங்களுக்கு உகந்தது தெரியுமா?

Updated: திங்கள், 19 மார்ச் 2018 (15:06 IST)
 
ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன்பெறலாம். அமாவாசை, பௌர்ணமி, திங்கள் கிழமையில் இம்மலரை  பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். 
 
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம். எலுமிச்சை பழம் பலிகொடுத்த பின்னரே இம்மலரை பயன்படுத்த வேண்டும். கனியை காலால் மிதித்து திருஷ்டி கழித்த பின்னரோ அல்லது சூலத்தில் கனி சொருகிய பின்னரோ அல்லது  எலுமிச்சை கனியை அறுத்து தீபம் ஏற்றிய பின்னரோ தான் இம்மலரை அம்மனுக்கு சூட வேண்டும்.
 
பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மலராகும். இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரண காரியமின்றி  பயன்படுத்தக்கூடாது. தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இதுபோன்று ஏதாவது பரிகாரமாக இருக்க வேண்டும்.
 
செவ்வரளி செடியை வீட்டினில் வளர்க்கக்கூடாது. வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும். ஒதுக்குப்புறமான இடங்களில் வளர்க்க வேண்டிய செடியாகும். இச்செடியின் காற்று அடிக்கடி நம்மேல் பட்டால் செல்வ செழிப்பை இழக்க ஆரம்பிப்போம் கவனம்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments