1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சாம்பிராணி தூபம் போடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ நிவாரணியாக செயல்படுவது சாம்பிராணி தூப பொருட்கள்.
வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி ஆகியவற்றை பொடியாக செய்து வீட்டில்  தூபம் போட்டு வந்தால் எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி போன்றவை எளிதாக மறைந்து விடும்.
 
வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. 
 
மேற்க்கண்ட பொருள்களை சாம்பிராணி நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்களுக்கு உரியது எனவே வீட்டில் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.
 
கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்.
 
கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும், வீண் சண்டை, அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும். நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
 
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.