Daily Horoscope
✕

வாராகி அம்மனை வழிபட உகந்த பஞ்சமி திதி !!

Written By Sasikala
Updated: புதன், 28 ஜூலை 2021 (16:09 IST)

சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். நாம் செய்கின்ற காரியத்தில் ஜெயமும், காரிய சித்தியும் தருபவள். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு  செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். 
 
எல்லோரும் பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபடலாம். ஆனால், குறிப்பாக பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.  இந்த ஜாதகர்கள் பஞ்சமி திதியில் பாம்பு புற்று உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று ஐந்து எண்ணெய் கலந்து அல்லது நல்லெண்னெயை சிகப்பு திரி போட்டு குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி நம் வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக்கொண்டே வழிபட வேண்டும்.
 
நிவேதனமாகப் பூண்டு கலந்து தோல் நீக்காத உளுந்த வடை அல்லது நவதானிய வடை மிளகு சேர்த்த வடை, தயிர்ச்சாதம், மொச்சை, சுண்டல், பானகம் ஆகியவை நிவேதனமாகப் படைக்கலாம். 
 
மந்திரம்: ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ - என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபட எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்.
 
குறிப்பாக ஏவல், பில்லி, சூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.

எல்லாம் காட்டு

சத்குருவிற்கு உலக அமைதி விருது: மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்

ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும்.. சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை...

இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோபாஷ்டமி பண்டிகை.. கோபூஜை செய்ய சரியான நேரம் எது?

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments